Paristamil Navigation Paristamil advert login

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் தங்கப் புதையல்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் தங்கப் புதையல்

19 மாசி 2015 வியாழன் 15:15 | பார்வைகள் : 16089


 இஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது.

 
அத்துறைமுகம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
 
அந்தக் கப்பலுக்குள் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன. இதுவரை 9 கிலோ தங்க நாணயங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும் ஏராளமான நாணயங்கள் இருக்கக்கூடும் எனக் கருதி தொடர்ந்து தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது.
 
அரபு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் பலவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிவித் கலிபக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்க நாணயங்களைக் கொண்டு வந்த போது கப்பல் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
 
இந்தக் கப்பலை புதைபொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று கண்டுபிடித்தது. ஆனால், அதில் உள்ள தங்கம் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்