ஒலிம்பிக் போட்டிகள் நடந்த முக்கிய தகவல்கள்
1 மாசி 2015 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 10392
1.ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக சாம்பியன் பட்டம் பெற்றவர் யார்?
ஓலிஸ் என்ற வீரர், கொராய்போஸ் ஸ்டேடியத்தில் 186 கஜம் ஓடி, ஆலிவ் மலர்க்கொத்தை கி.மு.776ம் ஆண்டு பெற்றார்.
2. ஆசியா கண்டத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் எவை?
1964 - டோக்கியோ, 1988 - சியோல், 2008-பெய்ஜிங்.
3. போட்டோ பினிஷ் மூலம் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டது எந்த ஒலிம்பிக்கில்?
1964 - டோக்கியோ
4. 1972 மியூனிக் போட்டியின் முக்கியங்கள் எவை?
11 இஸ்ரேல் வீரர்களை பாலஸ்தீன தீவிரவாதிகள் கொலை செய்தது, நீச்சல் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்கள் பெற்றது மற்றும் வீரர்கள் விளம்பரத்திற்காக பொருள் ஈட்டியது என்பவையாகும்.
5. நீளந்தாண்டுதலில் முதன்முதலாக பட்டம் பெற்றவர் யார்?
ஸ்பார்டாவைச் சேர்ந்த சியோனிஸ் 23 அடி 1.5 அங்குலத்தை கி.மு 7ம் நூற்றாண்டில் தாண்டினார்.
6. மல்யுத்தப் போட்டியில் 5 பட்டங்களைப் பெற்றவர் யார்?
கி.மு. 516-540க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மிலோன்(milon) என்பவர்.
7.ஒலிம்பிக் போட்டிகளில் இளவயதில் பட்டங்கள் பெற்ற வீராங்கனை யார்?
12 வயது நிறைந்த சோரன்சென்-டென்மார்க் 1936- பெர்லின்-டைவிங்.
13 வயது-மார்ஜொரி ஜெஸ்டரிங்-அமெரிக்கா - 1936 பெர்லின்-டைவிங்.
14 வயது-ரிசவாகிட்டாமூரா-1932 லாஸ்ஏஞ்சல்ஸ்-நீச்சல்.
14 வயது-நாடியாகோமான்ஸி-ருமேனியா-1976 மான்டிரியேல்-சீருடல் போட்டி.
8. 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கின் அரசியல் முக்கியத்துவங்கள் என்ன?
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகள் இணைந்து போட்டியிட்டன. பிரிந்து போன சோவியத் நாடுகளின் அணிகள் இணைந்து போட்டியிட்டன. 1960ம் ஆண்டு விலக்கி வைக்கப்பட்ட(ரொடீஷியா)தென் ஆப்பிரிக்காக நாடு மீண்டும் பங்கேற்றது.
9. ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற தொண்மையான ஸ்டேடியங்கள் எவை?
ஒலிம்பியா ஸ்டேடியம் கி.மு.500. பனாத்தினய்கோ, கி.பி.19ம் நூற்றாண்டு.
10. ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் அமெரிக்காவின் சாதனை என்ன?
1972ம் ஆண்டு முதல் தொடர்ந்து 36போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் கூட அந்த அணி தோற்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக்கில் தோற்றது. அர்ஜென்டினா வென்றது.