பூமியைப் போன்ற எட்டு கிரகங்கள் கண்டுபிடிப்பு...
12 தை 2015 திங்கள் 10:38 | பார்வைகள் : 10532
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கிரகங்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விஷயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தக் கிரகங்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை , அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
ஆனால் இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.
ஆனாலும், இந்த கிரகங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.