Paristamil Navigation Paristamil advert login

பூமியை வானம் தொடுமா?

பூமியை வானம் தொடுமா?

17 ஐப்பசி 2014 வெள்ளி 08:47 | பார்வைகள் : 11491


 வானமும், பூமியும் சேருவதை போல தோற்றமளிக்கும் மிகப்பெரிய பாலைவனம் சொர்க்கமாக காட்சியளிக்கிறது.

 
தென் மேற்கு பொலிவியாவில் ஆண்டீஸ்(Andes) மலை முகட்டில் கடல் மட்டத்தில் இருந்து 11,995 அடி உயரத்தில், சலார் டி உயுனி (Salar De Uyuni) என்ற உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனம் அமைந்துள்ளது.
 
சலார் டி உயுனி என்ற இந்த பாலைவனமானது, சுமார் 30,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன் அமைந்திருந்த மிகப்பெரிய ஏரியான மின்சின்(Lake Minchin) என்ற ஏரியில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக உருவானதாக தெரிகிறது.
 
மேலும் தற்போது இந்த பாலைவனத்தில் அதிகளவில் சோடியம், பொட்டாசியம், லித்தியம் மற்றும் மெக்னீசியம் கிடைக்கின்றன.
 
அவற்றுள் முக்கியமாக பேட்டரிகளில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படும் லித்தியம் (Lithium) உலகத்திலேயே இங்கு அதிகளவில் கிடைக்கின்றது.
 
அதாவது உலகில் இருக்கும் மொத்த லித்தியத்தில் 43% இங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
இந்த பாலைவனம் கடல்மட்டத்தில் இருந்து உயர்ந்து இருப்பதால் அங்கிருந்து பார்க்கும் போது, வானம் பூமியை தொடுவதை போல தோற்றமளிக்கிறது.
 
இந்த கண்கவரும் இடத்தில் இருக்கும் போதும், அங்கே நடக்கும் போதும் அனைவருக்கும் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வு ஏற்படுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
 
வானமும், பூமியும் சேருவதை போல தோற்றமளிக்கும் இந்த இடத்திற்கு ஆண்டுதோறும் பல சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்