மனித உடலில் மறைந்திருக்கும் மர்மங்கள்!

26 ஆவணி 2014 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 16412
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஓர் தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா…?
ஒவ்வொரு மனிதனிலும் எமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை தீ நுண்மம் (வைரசு, Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும் கிருமிகள் பலவிதமான நோய்களுக்குக் காரணமாக இருந்தாலும், மனித உடலில் வாழும் அனைத்து கிருமிகளும் எமது உடலின் செயல்பாட்டுக்கும் மற்று நாம் உயிர் வாழ்வதற்கும் உதவுகின்றன.
எமது உடலில் எத்தனை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன?
நீங்கள் நினைப்பது போல் நூறு அல்லது ஆயிரம் இல்லை. பல கோடி கோடி (> 1.000.000.000.000.000) நுண்ணுயிரிகள் எமது உடலில் மற்றும் உடலினுள் வாழ்கின்றன என்பது தான் உண்மை! குறிப்பாக கிருமிகளை எடுத்துக்கொண்டால், புவியில் காணப்படும் கிட்டத்தட்ட 3.000.000 கிருமி வகைகளில், எமது உடலில் குறைந்தது 10.000 கிருமி வகைகள் வாழ்கின்றன.
உதாரணத்திற்கு எமது வாயினுள் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான கிருமிகள் வசிக்கின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, எமது குடலில் வாழும் கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதில் வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? எமது உடலில் வாழும் அனைத்து கிருமிகளையும் ஒன்றாக எடுத்து ஓர் தராசில் வைத்துக்கொண்டால், அதன் நிறை 2 kg ஆக இருக்கும். மேலும் எமது உடலின் 99,9 சதவீதமான இடங்களில், நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1