நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும்?
5 ஆவணி 2014 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 11332
நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும்? நாம் பார்க்க முடியாதா? இந்தக் கேள்வியை யாராவது கேட்டதுண்டா?
நிலா என நாம் சொல்லும் சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலமும், தன்னைத் தானே அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலமும் சரி சமமாக உள்ளது. அதனால் தான்,அது தனது முதுகுப் புறத்தை-மறுபக்கத்தைக்- பூமிக்குக் காட்டுவதே கிடையாது.
சந்திரன் இப்படி தனது மறு பக்கத்தைக் காட்டாமல், அச்சில் சுழல்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தி தடுப்பது தான் காரணம்.
எனினும் 1959 ஆம் ஆண்டில் ரஸ்யா (அப்போதைய சோவியத் யூனியன்) அனுப்பிய லூனா 3 விண்கலம், சந்திரனை அடைந்து சந்திரனின் மறுபக்கத்தைப் படம் எடுத்து அனுப்பியது. அப்போது தான் மனிதன் சந்திரனின் மறுபுறம் இருட்டல்ல என்பதைத் முதல் முறையாக தெரிந்து கொண்டான்.1968 இல் அப்பொலோ 8 மூலம் மனிதக் கண்களால் பார்க்க முடிந்தது.
இதற்கு முன்னர் நிலாவின் மறு பக்கத்தை நிலவின் இருண்ட பக்கம் என்றும், பின்னர் தொலைவுப் பக்கம் என்றும் சொல்லப்பட்டது. (dark side of the Moon, far side of the Moon )
இதுதான் நிலாவின் மறுபக்கம்.