Paristamil Navigation Paristamil advert login

நானோ தானியங்கி தொழில்நுட்பம்

நானோ தானியங்கி தொழில்நுட்பம்

3 ஆடி 2014 வியாழன் 18:46 | பார்வைகள் : 10913


மருத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மருந்து வில்லைகளின் பாவனை அற்றுப்போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து வில்லைகளுக்கு பதிலாக நானோ தானியங்கி (Nano Robot) எனப்படும் மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் உடலுக்குள் அனுப்பி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இந்த தானியங்கிகள் இரத்தக் குழாய்கள் ஊடாக உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டுபிடித்து அழித்து விடுவன.

இதில் என்ன அதிசயம் தெரியுமா? ஒரு நானோ தானியங்கியின் அளவு 0,000000001m மட்டுமே தான். ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100.000 மடங்கு சிறிதாக இருக்கும். இது மட்டுமன்றி, புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கற்கள், AIDS என்று எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் குணப்படுத்த உதவும் இந்த நானோ தானியங்கிகள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்