உலகில் மிகவும் உயரமான மலை எது?

24 ஆனி 2014 செவ்வாய் 18:03 | பார்வைகள் : 15213
உலகிலேயே உயரமான மலை எவரெஸ்ட் மலை (Mount Everest) என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம் தான்.
நீங்கள் எவரெஸ்ட்டின் உச்சியில் நின்று கொண்டு பூமியின் மையத்தில் இருந்து மிக அதிக தொலைவில் நின்று கொண்டிருப்பதாகக் கருதினால், அது நியாயமானதுதான். ஆனால் நிங்கள் கருதுவது தவறு என்பது தான் உண்மை ஆகும்!
பூமியின் வடிவமைப்பின் காரணமாக, நிலப்பகுதியில் பூமியின் மையத்தில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ளது எக்குவடோரிலுள்ள ஒரு உறங்கும் எரிமலை ஆகும். அந்த எரிமலையின் பெயர் மவுண்ட் சிம்போராசோ (Mount Chimborazo).
கடைசியாக இந்த எரிமலை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வெடித்துச் சிதறியது என்று கணக்கிடப்பட்டுள்ளது.