வாய் வழியாக சிறுநீர் கழிக்கும் ஆமைகள்
26 வைகாசி 2014 திங்கள் 18:58 | பார்வைகள் : 10714
பொதுவாக ஆமைகள் வழக்கமான முறையில்தான் சிறுநீரை வெளியேற்றுகின்றன. ஆனால் சில ஓடில்லாத ஆமைகள் உப்பு நீர் பிரதேசத்தில் வசிப்பவை தன் வாயின் வழியாக சிறுநீரை வெளியேற்றுகின்றன.
வாழும் இடத்தில் தண்ணீர் அதிக உப்பாக இருந்தால் நீர் அருந்தி உடல் யூரியா உப்பு அளவைக் குறைக்க முடியாது. நாம் தண்ணீர் அருந்தி சிறுநீரை வெளியேற்றி உடல் யூரியாவை கழித்துக் கட்டுகிறோம். சீன மேன்தோல் ஆமைகளுக்குத் தண்ணீரை அருந்தும் பாக்கியம் இல்லாததால் உடலின் யூரியா உப்பை வெளியேற்ற ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றன.
உப்பு நீர் நிறைந்த குளம் குட்டைகளில் தலையை மூழ்கடித்துக் கொண்டு ஒன்றரை மணிநேரம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வாய் வழியாக சிறுநீரை மெல்ல உப்புத் தண்ணீரில் கரைத்து நீக்கிவிடுகிறது.