தொலைபேசியின் வரலாறு

1 வைகாசி 2014 வியாழன் 18:15 | பார்வைகள் : 21351
தொலைபேசி என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி.
இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர்.
இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர்.
இக்கருவி இன்று கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில்நுட்ப வளரச்சி அடைதுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025