Paristamil Navigation Paristamil advert login

கண்களால் சத்தத்தை கேட்கும் தவளைகள்!

கண்களால் சத்தத்தை கேட்கும் தவளைகள்!

11 சித்திரை 2014 வெள்ளி 11:48 | பார்வைகள் : 11112


* முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

* எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.

* தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.

* நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.

* தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.

* மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

* ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.

* இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன.

* மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.

* குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

* சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.

* சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ.

* மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

* மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து.

* குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.

* மனநோய் மருத்துவ முன்னோடி சிக்மெண்ட் பிராய்டு.

* ஐம்பது வயதுக்கு மேல் சுவை உணரும் ஆற்றல் குறையும்.

* எலிகள் இசையை விரும்புகின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்