தகவல் துளிகள்!
26 பங்குனி 2014 புதன் 08:12 | பார்வைகள் : 12122
* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
* உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
* ஆமைக்கு பற்கள் கிடையாது.
* டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
* கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
* நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.