பாம்பு பற்றி சில தகவல்கள்
18 பங்குனி 2014 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 11226
பாம்பு தற்காப்பு-தாக்குதல் (defensive, offensive) என்ற முறையில் கடித்தாலும், பாம்பின் விசம் கொடியது, உடனே கொன்று விடும் என்கிறார்கள். ஆனாலும் பாம்பின் விசம் பாம்பிற்கு நஞ்சல்ல. ஏன்? நாம் தமிழில் நஞ்சு, விசம் என்று கூறினாலும் கூட, ஆங்கிலத்தில் poison,venom, toxin என வெவ்வேறாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது. பாம்பின் விசத்தில் உள்ள toxin, பாம்பு தன் நச்சுப் பல்லினால் (fang) அல்லது வேறொரு உயிரினம் ஏதோ ஒரு உறுப்பினால் நமது உடம்பில் குத்துவதன் மூலம், குருதியில் toxin நிறைந்த நஞ்சை செலுத்துகிறது. இது venom எனப்படுகிறது. இந்த Venom என்ற நஞ்சு, உட்கொள்ளுவதால் அல்லது மணப்பதால் உடலில் நச்சுத்தன்மையை பொதுவாக ஏற்படுத்துவதில்லை.
Poison என்ற toxin, ஏதோ ஒன்றினால் குத்தி அல்லது செலுத்தி குருதியில் விசத்தை சேர்க்காமல்,உட்கொள்ளுவதால் அல்லது மணப்பதால் நச்சுத்தன்மையைக் கொடுக்கிறது.இதுவே Poison ற்கும் Venom ற்கும் இடையிலான வேற்பாடாகும்.
அதனால் தான் நச்சுத்தன்மை உடைய பாம்பொன்றை வேறொரு பாம்பு விழுங்கினாலும், அதனால் அது இறந்து விடுவதில்லை. நமது உடலில் கணையம் போன்ற பகுதிகளால் சுரக்கப்படும் சில பொருட்கள், நச்சுத்தன்மை உடையனவையாக இருந்தும், நமக்கு அதனால் உயிரிழப்பில்லை.
ஒவ்வொரு பாம்பின் விசத்தின் தன்மையும் வேறுபடுகிறது. சில இதயத்தையும் இதயம் சார்ந்த பகுதிகளையும் பாதிக்கிறது. இன்னொன்று நரம்பு மண்டலத்தையும்,மூளையையும் பாதிக்கிறது. அடுத்தது கடித்த இடத்தில் மட்டுமே பாதிப்பை தருகிறது.
ஆனாலும் விசப் பாம்புகளுடன் வாழும், Romulus Whitaker போன்றவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள்.