11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சகாரா பாலைவனம் எப்படி இருந்தது? ஆய்வில் தகவல்
23 தை 2017 திங்கள் 13:54 | பார்வைகள் : 13746
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சகாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமாக சகாரா திகழ்கிறது. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பாலைவனம் மிக அதிக அளவு வெப்பம் கொண்டது.
ஆனால் இந்த பாலைவனம் 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருப்பதை விட 10 மடங்கு பசுமையாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது.
அந்த கால கட்டத்தில் அங்கு அதிகமான மழை பொழிவு இருந்தது. அப்பகுதி முழுவதும் பசுமையாக இருந்ததால் மக்கள் அதிக அளவில் குடியிருந்தனர். கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் இருந்தது.
இதனால் கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்பட்டன. ஆனால் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சகாரா பாலைவனம் வறட்சி பிடியில் சிக்கியது. 1000 ஆண்டுகள் படிப்படியாக வறண்டு வெப்பம் மிகுந்த பாலைவனமாக மாறியது.
இத்தகவல் புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஜெசிகா டயர்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சகாரா பாலைவனம் பகுதியில் பெய்த மழை அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் இத்தகைய தகவல் தெரிய வந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக சகாரா படிப் படியாக பாலைவனமாக மாறி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி மூலம் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதும் அறியப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan