27வது முறை ஒரு வினாடி தாமதமாக பிறந்த புத்தாண்டு!
1 தை 2017 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 10269
2017ம் ஆண்டு பிறந்ததை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், ஒரு வினாடி தாமதமாக புத்தாண்டு பிறந்துள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு அறிவித்துள்ளது.
நாம் வாழும் பூமி நிலவின் ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல காரணங்களால் வேகமாகவும், மெதுவாகவும் சுழலும். இதனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் நேரத்தையே வானியல் நேரம் என்கிறோம்.
தற்போதைய சூழலில் அணு கடிகாரத்தை பின்பற்றியே நேரம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது, பூமியின் சூழலில் மாற்றங்கள் ஏற்படும் போது வானியல் நேரத்திற்கும், அணுக்கடிகார நேரத்திற்கும் இடையே மாற்றம் இருக்கும்.
அதாவது ஒவ்வொரு 18 மாதத்திற்கு பின்னரும் ஜூன் 30 அல்லது டிசம்பர் 31ம் திகதி கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்படும், இதை லீப் வினாடி என்கிறோம்.
அந்த வகையில், நேற்று ஒரு வினாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு தாமதாக பிறந்துள்ளது என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு அறிவித்துள்ளது.
1972ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த பழக்கத்தில், நேற்று நள்ளிரவு உள்பட இதுவரை 27 முறை கூடுதலாக 1 வினாடி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.