Paristamil Navigation Paristamil advert login

90 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான பறவை இனம் கண்டுபிடிப்பு

90 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான பறவை இனம் கண்டுபிடிப்பு

26 மார்கழி 2016 திங்கள் 18:57 | பார்வைகள் : 9943


 உலகில் இதுவரை கண்டறியப்பட்ட பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

 
எனினும் ஆராய்ச்சிகளினூடாக இதுவரை கண்டறியப்படாத பல உயிரினங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
 
இதற்கு பறவைகளும் விதிவிலக்கு அல்ல. ஆம், சுமார் 90 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பறவை இனம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
 
Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்றே குறித்த பறவை இனத்தினை கனடியன் ஆர்டிக் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
 
Tingmiatornis arctica எனப் பெயரிடப்பட்டுள்ள இப் பறவையின் எலும்புகள் சீகுல் மற்றும் நீர்க்காகம் என்பவற்றின் எலும்புகளை ஒத்ததாக இருப்பதாக அக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
பல மில்லியன் வருடங்களாக காணப்படும் இப் பறவையின் கூர்ப்பினை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் நிழவுள்ள சில மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும் என நம்புகின்றனர்.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்