ஆவர்த்தன அட்டவணையில் நான்கு தனிமங்களுக்கு பெயர்!
8 மார்கழி 2016 வியாழன் 10:20 | பார்வைகள் : 14260
ஆவர்த்தன அட்டவணையில் நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் ஆகிய நான்கு தனிமங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவர்த்தன அட்டவணையின் 7ஆவது வரிசை முழுவதும் பூர்த்தியாகியுள்ளது.
ஆவர்த்தன அட்டவணையில் அணு எண் அடிப்படையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் 113, 115, 117, 118 வரிசை எண்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த எண்ணிக்கையிலான அணு எண்கள் கொண்ட தனிமங்கள் கண்டுப்படிக்கப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம் ஆகும்.
இந்நிலையில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்ய இரசாயனவியல் நிபுணர்கள் மேற்கண்ட அணு எண்களை கொண்ட 4 புதிய தனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுக்கு கடந்த டிசம்பரில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த நான்கு தனிமங்களும் தற்போது ஆவர்த்தன அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
முதலில் இந்தத் தனிமங்கள் யுனன்டிரியம் (113), யுனன்பென்டியம்(115), யுனன்செப்டியம் (117), யுனனோக்டியம் (118) என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தன.
இப்போது இவற்றுக்கு நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் என்ற பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan