Paristamil Navigation Paristamil advert login

பூமி உருவானது எப்படி?

பூமி உருவானது எப்படி?

1 கார்த்திகை 2016 செவ்வாய் 15:27 | பார்வைகள் : 12370


 சூரியன் சுழலும் போது 80 ஆயிரம் மைல் உயரத்திற்கு அதன் தீ சுவாலைகள் எழுகின்றன. இவ்வாறு எழுகின்ற தீ சுவாலைகள் வீசி எறியப்பட்டு பூவியும் கோள்களும் உண்டாயின என்பது ஒரு கோட்பாடு. 

 
நம் சூரியன் மீது வால் நட்சத்திரமோ அல்லது வேறு சூரியனோ மோதியதால் சிதறிய பகுதிகளே கோள்களாக உருவெடுத்ததாக இன்னொரு கோட்பாடு கூறுகிறது.
 
ஆனால், கேல்டிக் துணிக்கைகள் இணைந்ததாலேயே விண்கற்களும், விண்பாறைகளும் உருவாக்கப்பட்டன என்பதே தற்போது புவியைப்பற்றி நிலவி வரும் கருத்தாகும்.
 
இவ்வாறு உருவாக்கப்பட்ட விண்கற்களும், விண்பாறைகளும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டதால் சிறிய கோளம் உருவாக்கப்பட்டது.
 
அக்கோளத்திற்குள் ஈர்ப்பு விசை அதிகரிக்க அதிகரிக்க வேறு கோளங்களும் விண்கற்களும் உள்ளிளுக்கப்பட்டு மிகப்பெரிய கோளங்கள் உருவாகின.
 
அவ்வாறு உருவாக்கப்பட்டவையே இந்த பூமியும் ஏனைய கோள்களும் என கூறப்பட்டு வருகிறது.
 
ஆனால் விண்கற்களும் விண்பாறைகளும் கோளங்களும் இணைந்து கோள்களும் பூவியும் உருவாகியிருக்குமா என்ற கேள்வி எம்மத்தியில் நிலவத்தான் செய்கிறது.
 
இந்த கேள்விக்கு விடை தேட முயற்சித்தார் ஒரு விஞ்ஞானி. இதனால் உப்பு உள்ளிட்ட மினரல்களை ஒரு பெரிய உறையினுள் வைத்து விண்வெளியில் மிதக்கவிட்டார்.
 
அப்போது நிகழ்ந்த சம்பவம் தேடலுக்கான தீர்வை தந்தது. உப்பும் மினரல்களும் ஈர்ப்பினால் இணைந்துகொண்டது.
 
இதன் மூலமே விண்கற்களும் விண்பாறைகளும் இணைந்ததாலேயே பூவி உருவாகியுள்ளது என நிரூபணமானது.
 
மேலும் விண்பாறைகள் மோதியதால் உண்டான வெப்பத்தினால் கோளம் உருகி பாறைக்குழம்புகளால் நிறைந்தது.
 
பாறைக்குழம்புகளால் நிறைந்த கோளம் நாளடைவில் குளிர ஆரம்பித்தது. கோளத்தினது மேற்பரப்பு குளிர்ந்தாலும் உள்ளே பாறைக்குழம்பு உருகிய நிலையிலேயே இருந்தது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கோளமே பூவி ஆகும்.
 
இவ்வளவையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அடுத்த கட்டமாக பூமியின் வயதை பற்றி ஆராய களத்தில் இறங்கினார்கள். கண்டுபிடித்தார்கள்.
 
பூமியிலிருக்கும் பாறைகளிலுள்ள யுரேனியம், தோரியம் போன்ற அணுக்களினும் அணுக்களின் சிதைவின் அளவை வைத்து பூமியின் வயதைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் பூமியின் வயது 460 கோடி வருடங்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். இவ்வாறே பூவி உருவாகியது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்