ஜெரூசலம் பற்றி பண்டைய குறிப்பு
27 ஐப்பசி 2016 வியாழன் 23:54 | பார்வைகள் : 10913
பைபிளுக்கு அப்பால் ஜெரூசலம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பண்டைய வைன் பதிவேடு ஒன்றை இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சாக்கடலுக்கு அருகில் இருக்கும் பாலைவனப்பகுதியைச் சேர்ந்த ஓலைச்சுவடி ஒன்றை திருடர்களிடம் இருந்து இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
அதில் மன்னருக்கு கொண்டு செல்லும் வைன் மது கப்பலின் விபரம் ஹீப்ரு மொழியில் இரு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
“ஜெரூசலத்திற்கு நாகரத்தில் இருந்து வைன் சாடிகள் மன்னரின் சேவகர்களுக்கு” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓலைச்சுவடி பைபிளுக்கு அப்பால் ஜெரூசலம் பற்றி குறிப்பிடும் ஆரம்ப ஆதாரம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.