இன்றையநாளில் காணப்படும் சிறப்பு!

6 ஐப்பசி 2016 வியாழன் 05:02 | பார்வைகள் : 15746
இன்று நாட்காட்டியில் திகதியை மாற்றும் போது நீங்கள் ஒரு புதுமையை உணரலாம்.
06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த திகதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும்.
இதற்கு பெயர் 'பாலின்டிரோம்' திகதி. பாலின்டிரோம் என்பது இடமிருந்து வலது பக்கம் பார்த்தாலும், வலமிருந்து இடதுபக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும்.
உதாரணமாக 'விகடகவி' என்ற தமிழ் வார்த்தையை கூறலாம்.
இந்த நுாற்றாண்டில் (2001 முதல் 2100 வரை) ஏழு இலக்கங்களை கொண்ட 26 திகதிகளும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 திகதிகளும் என மொத்தம் 38 முறை பாலின்டிரோம் வருகிறது.
அடுத்து ஏழு இலக்க பாலின்டிரோம் திகதி 2017, அக்டோபர் 7 அன்று (7.10.2017) வருகிறது.
எட்டு இலக்க 'பாலின்டிரோம்' திகதி 02/02/2020 அன்று வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025