யுத்த களத்தில் கவச வாகனம் பயன்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள்
19 புரட்டாசி 2016 திங்கள் 04:36 | பார்வைகள் : 10248
உலகளவில் போர்க்களத்தில் கவச வாகனங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டுகள் எட்டியுள்ளது.
முதலாம் உலகப் போரில்தான் கவச வாகனங்கள் போர்க்களங்களில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டன.
முதலாவது உலகப் போரில் வடக்கு சிரியாவில் 1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் முதல் முறை டாங்கிகளை பயன்படுத்தியதே யுத்த களத்தில் கவசவாகனங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக பதிவானது. இதன்படி கடந்த வியாழக்கிழமையுடன் கசவ வாகனங்களுக்கு 100 ஆண்டுகள் பூர்த்தியானது.
வடக்கு பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட முதல் யுத்த டாங்கியின் மாதிரி ஒன்று மத்திய லண்டனிலுள்ள ட்ரஃபால்கர் சதுக்கத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட யுத்த டாங்கிகள், அகழிகள் வெட்டப்பட்டு முன்னேற முடியாமல் தவித்த பிரிட்டிஷ் படையினருக்கு உதவ சோம் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
அப்படி பயன்படுத்தப்பட்ட பல டாங்கிகள் செயலற்று போனாலும், மூன்றில் ஒரு பங்கு ஜெர்மனிய இராணுவ நிலைகளை உடைத்துக் கொண்டுச் சென்றன.
டாங்கிகளின் கண்டுபிடிப்பு நிலப்பரப்பில் நடைபெறும் போர் முறைகளை முற்றாக மாற்றியமைத்தது.