உலகின் மோசமான கட்டடம் எது?
8 புரட்டாசி 2016 வியாழன் 09:47 | பார்வைகள் : 10097
உலகின் அசிங்கமான கட்டடத்திற்கான போட்டியில் இங்கிலாந்தில் உள்ள லிங்கன் பிளாசா என்ற அடுக்குமாடி கட்டிடம் வெற்றி பெற்றுள்ளது.
பார்ப்பதற்கு ஒழுங்கில்லாமல்,அசிங்கமான இருக்கும் கட்டிடங்களுக்கான போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கார்பன்கல் கோப்பை என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டிற்கான போட்டியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் அமைந்துள்ள 'லிங்கம் பிளாசா' என்ற கட்டிடம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த கட்டிடத்தின் அமைப்பு,கட்டப்பட்ட விதம்,வெளிப்புற நிறப்பூச்சு ஆகியவை பார்ப்பவர்களை முகம் சுழிக்கச் செய்யும் வகையில் இருப்பதால் கார்பன்கல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக போட்டி நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தங்கள் கட்டிடத்தை வாங்குபவர்கள் அங்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என அந்த கட்டிட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியது போலவே லிங்கம் பிளாசா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து கட்டிடங்களும் விற்றுத்தீர்ந்துவிட்டனவாம்.
கடந்த வருடம் நடந்த கார்பன்கல் கோப்பை போட்டியில் வாக்கி டாக்கி என செல்லப்பெயருடன் அழைக்கப்படும் 'லண்டன் ஸ்கைஸ்கிராப்பர்' என்ற கட்டிடம் முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.