உலகின் பழைமையான படிமங்கள் கண்டுபிடிப்பு
2 புரட்டாசி 2016 வெள்ளி 00:08 | பார்வைகள் : 10427
பூமியின் மிகப் பழைமையான படிமங்கள் என நம்பப்படும் ஒன்றை, கிரீன்லாந்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூன்றரை பில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் இந்த பாறைகளின் அலை வடிவங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இந்த படிமங்களானது, ஸ்ட்ரொமடொலைட்ஸ் என்னும் நுண்ணுயிர்களால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு அவுஸ்திரேலியாவில் உயிர்கள் வாழ்ந்ததற்கான பழைமையான ஆதாரத்தை காட்டிலும் இந்த படிமங்கள் மிஞ்சியதாக இருக்கும்.
இந்த கண்டுபிடிப்பானது சர்வதேச அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.