Paristamil Navigation Paristamil advert login

பெண்களை அதிகம் விரும்பும் மீன்கள்

பெண்களை அதிகம் விரும்பும் மீன்கள்

3 ஆவணி 2016 புதன் 18:26 | பார்வைகள் : 10298


 தன் இனம் சார்ந்த பெண்களை அதிகம் விரும்பும் மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
பெண் மீன்கள் குழுவாக அதிகமாக இடங்களில் வசிப்பதற்கு அதிகம் விரும்பும் மீன் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மீன் இந்தியப் பெருங்கடல், கிழக்கு ஆப்பிரிக்க பெருங்கடல், மேற்கத்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் ஜப்பான் போன்ற கடலில் வசிக்கும் Blue Lined Surgeonfish என்ற மீன் வகைகளாகும்.
 
இந்த வகை மீன்கள் Blue Banded Surgeonfish, Clown Surgeonfish, Striped Surgeonfish, Zebra Surgeonfish எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த மீன் 38 சென்டிமீட்டர் அளவை கொண்டுள்ளது.
 
பகல் நேரங்கள் ஆழமற்ற நீரில் வாழும் இந்த மீன்கள் இரவு நேரத்தில் ஆள்கடலில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆழமற்ற பாறைகள் மற்றும் பவள பாறை பகுதிகளில் வளரும் தாவரங்களை விசேட உணவாக இந்த மீன்கள் எடுத்துக் கொள்ளும். 
 
எனைய  Surgeonfishயை விடவும் இது மிகவும் வித்தியாசமான தன்மையை கொண்டுள்ளது. ஒரே உணவை பெற்றுக்கொள்ளும் ஏனைய மீன்களை தாக்குவதற்கு இந்த மீன் நடவடிக்கை மேற்கொள்ளும். இதன் போது அதன் உடலின் நிரம் மாற்றமடையும்.
 
இந்த மீன் வகை ஒரு குழுவாகவே செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அதிகமான இந்த வகை ஆண் மீன்கள் பெண்களின் அருகில் வசிப்பதற்கே அதிகம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்