Paristamil Navigation Paristamil advert login

நிழல் ஏன் கருப்பாக இருக்கிறது?

நிழல் ஏன் கருப்பாக இருக்கிறது?

27 ஆடி 2016 புதன் 21:59 | பார்வைகள் : 11167


 நமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்களே இல்லையே, நமது நிழல் நம்மை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 
இருட்டிய நேரத்தில் நாம் சாலையில் நடந்து செல்கையில் நம்மை அறியாமலேய நமது நிழலை பார்த்து சில நேரத்தில் அச்சம் கொள்கிறோம்.
 
இவ்வாறு சில நேரங்களில் நம்மை அச்சம்கொள்ள வைக்கும் நிழல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நிழல் என்றால் என்ன?
 
ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது, அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர்.
 
நிழல் ஏன் கருப்பாக இருக்கிறது?
 
நம்மில் பலபேர் நிழல் கருப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நிழல் கருப்பாக இல்லை, ஒளி அற்று இருக்கிறது.
 
ஒளி அற்றதை நாம் கறுப்பு என்கிறோம், எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால் அது வெள்ளையாகப் புலப்படும், சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும் போது பல வண்ணங்கள் காணப்படும்.
 
நிசப்தம் என்பது சப்தம் இன்மை என்பது போல, கருமை என்பது நிறம் அல்ல, ஒளி இன்மை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்