மலேரியா நுளம்புகளை தடுக்கும் கோழிகள்!

22 ஆடி 2016 வெள்ளி 00:37 | பார்வைகள் : 14088
மலேரியாவை சுமந்து வரும் நுளம்புகள் சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும், மனித ரத்தத்தையே பெரிதும் விரும்பவதாக எத்தியோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இது கால்நடைகளான ஆடு மற்றும் வெள்ளாடுகளிலிருந்து ரத்தத்தை அவ்வப்போது உறிஞ்சுகிறது. ஆனால், கோழிகளை மட்டும் தவிர்த்து விடுகிறது.
இந்த கண்டுபிடிப்பானது மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக நுளம்புகளின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் - எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025