Paristamil Navigation Paristamil advert login

இந்திய எறும்பு தின்னி (Indian pangolin)

இந்திய எறும்பு தின்னி (Indian pangolin)

12 ஆடி 2016 செவ்வாய் 16:49 | பார்வைகள் : 15027


 இந்திய எறும்பு தின்னி என்பது ஒரு எறும்பு தின்னி ஆகும். இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. 

 
இது கூரிய நுண்ணறிவுள்ள விலங்கு ஆகும். மற்ற பாலூட்டிகள் போலல்லாமல் இதன் உடல் முழுக்க உள்ள செதில்கள் இதற்கு பாதுகாப்பு கவசமாகப் பயன்படுகிறது. 
 
உடலில் உள்ள முடிகளே காலப்போக்கில் செதில்களாக மாறிவிட்டன. பிற விலங்குகளிடமிருந்து தன்னை தற்பாதுகாக்க ஒரு இரும்பு குண்டு போல தன்னை சுருட்டிக்கொள்ள இதனால் முடியும். இதற்கு நல்ல உடல் வலு இருப்பதால் சுருட்டிக்கொண்ட உடலை இயல்பான நிலைக்கு விரிப்பது நம்மால் இயலாத செயல்.இதன் செதில்கள் நிறம் இதன் வாழும் சூழலில் பூமியின் நிறம் பொறுத்து மாறுபடுகிறது.
 
இதன் முன்னங்கால்களை விட நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகளையும், செதில்களையும் தோண்டி எடுத்து உண்ணும் திறம் உடையது. மரங்களில் ஏறி மர எறும்புகளை பிடித்து உண்ணவல்லது. 
 
இது மரபபொந்துகளில் வசிக்கும். இதன் இறைச்சிக்காகவும், இதன் உடல் பாகங்கள் மருத்துவகுணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாகவும், இவை வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்