கொட்டாவி வருவது ஏன்?
4 ஆடி 2016 திங்கள் 04:30 | பார்வைகள் : 12190
கொட்டாவி விடுவது ஏன் என்பது குறித்து அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அது போன்ற கேள்விகளுக்கான பதிலை நாம் அறிந்திருப்போம். ஆனால் நீங்கள் கொட்டாவி விடும் போது கண்களில் நீர் கசிவது ஏன் என்று தெரியுமா?
ஏன் வருகிறது கொட்டாவி?
நாம் மிகவும் சோர்வடைந்தால் கொட்டாவி வரும். இதனை அனைவரும் அடிக்கடி உணர்ந்திருப்பார்கள். உடலுக்கு தேவையான ஒக்சிஜன் மெதுவாக கிடைப்பதால், மூச்சுவிடுவது மெதுவாக இருக்கும். இந்த கொட்டாவி மூலம் அதிகப்படியான ஒக்சிஜன் உடலுக்கு கிடைப்பதுடன், இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.
கண்களில் நீர் கசிய கொட்டாவி தூண்டுகிறது…
கொட்டாவி விடும் சந்தர்ப்பத்தில் கண்களில் நீர் கசிய ஆரம்பிக்கிறது. இது ஏன்? அதிகப்படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் (டயஉசiஅயட படயனௌ) தூண்டப்பட்டு கண்கள் மேற்பகுதியின் ஓரத்தில் நீர் வருகிறது. நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதால்இ இவை வருவதில்லை. எனவே, தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டாம்.
கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுகிறோம்…
கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுவதால் கண்ணீர் சுரப்பிகள் அழுத்தம் ஏற்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. இதனால் தீங்கு ஏற்படாது. இது உங்கள் கண்களை வறண்டு போவதில் இருந்து பாதுகாக்கின்றது.