வட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை! காரணம் என்ன?
19 ஆனி 2016 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 10215
வட அமெரிக்கா பல வகையான ஆச்சரியம் மிக்க உயிரினங்களை கொண்டிருந்தாலும், குரங்கினங்களை மட்டும் அந்நாட்டில் காண முடிவதில்லை.
குரங்கினங்கள் உலகின் வெவ்வேறு வகையான சூழல் நிலைமைகளில் வாழும் திறன் கொண்டவை.
ஜப்பானில் பனிக்குரங்குகள் பனிப்பாறைகளின் குளிர் காற்றை விரும்புவனவாக உள்ளன. அதேநேரம் அமேசன் மழைக்காடுகளில் உள்ள குரங்கினங்கள் சூடான, சரி ஈரப்பதனுள்ள சூழல் நிலைமைகளை விரும்புவன.
குரங்கினங்கள் மேற்படி பல்வேறு கால நிலைகளுக்கு இசைவாக்கம் கொண்டவையாக இருந்தும் ஏன் அமெரிக்காவில் மட்டும் அவையால் வாழ முடியவில்லை?
கிட்டத்தட்ட 56 - 33.9 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பச்சை வீட்டு வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.
இது வெப்ப அலைகள் உருவாக காரணமாயிருந்தது. இதனால் வெப்பமண்டல மழைக்காடுகள் புவி முழுவதும் உருவாகியது.
இத் தாவர வளர்ச்சி முதல் குரங்கினங்கள் வாழ்வதற்கான சூழல் நிலைமைகளை தோற்றுவித்தது.
மேலும், புவியின் காலநிலை மாற்றங்கள் பல வகையான உயிரினங்களை புவியிலிருந்து அகற்றியிருந்தது.
இதுவே வட அமெரிக்காவில் வாழ்ந்த அந்நாட்டுக்குரிய குரங்கினங்களுக்கும் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது புவியில் வாழும் குரங்கினங்கள் நவீன இனங்களாக கருதப்படுகின்றன.