வைத்தியராக மாறும் நானோ தானியங்கி Nano Robot
8 ஆனி 2016 புதன் 11:50 | பார்வைகள் : 11296
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுப்பீர்கள். ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…?
நீங்கள் எல்லோரும் நினைப்பது போல் உங்கள் டாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் தரமாட்டார்! அட மருந்து மாத்திரை இல்லாமல் எப்படி ஒருவரைக் குணப்படுத்துவது என்று யோசிக்கின்றீர்களா? அதற்குத் தான் எதிர்காலத்தில் நானோ தானியங்கி (Nano Robot) எனப்படும் மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் டாக்டர் உங்களுடைய உடலுக்குள் அனுப்பிவிடுவாராம். இந்தத் தானியங்கிகள் இரத்தக் குழாய்கள் ஊடாக உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டுபிடித்து அழித்து விடுமாம்.
இதில் என்ன அதிசயம் தெரியுமா? ஒரு நானோ தானியங்கியின் அளவு 0.000000001 m மட்டுமே தான்! ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100,000 மடங்கு சிறிதாக இருக்கும். இது எல்லாமே போதாது என்று புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கற்கள், AIDS என்று எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் குணப்படுத்த இந்த நானோ தானியங்கள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
நமது கண்களாலே பார்க்க முடியாத இந்த எந்திரங்கள் மனிதனின் உயிரைக் காப்பாற்ற போகின்றன.
-Niroshan Thillainathan