அழிவின் விளிம்பில் தன்சானிய யானைகள்
3 ஆனி 2016 வெள்ளி 23:59 | பார்வைகள் : 10787
தற்போதைய அளவில் யானைகளை வேட்டையாடுவது தொடர்ந்தால், அடுத்த ஆறு ஆண்டுகளில் மீதமிருக்கும் யானைகளையும் தன்சானியாவின் வேட்டையாடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இழந்துவிடும் என்று தெரியவந்துள்ளது.
செலூஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் யானைகள் இருந்தன. இப்போது, அது 90 சதவீத யானைகளின் எண்ணிக்கையை இழந்துள்ளது என்று உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.
சீனாவில் யானைத் தந்தத்துக்கு இருக்கும் தேவைதான் இந்த யானை வேட்டை இவ்வளவு பெரிய அளவில் நடப்பதற்குத் தூண்டுகோலாக அமைகிறது என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. சட்டத்திற்குப் புறம்பான தந்த வியாபாரம் தொடர அனுமதிக்கும் ஊழலை சமாளிக்கப் போவதாக தன்சானியாவின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.