Paristamil Navigation Paristamil advert login

கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம் என்ன?

கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம் என்ன?

24 வைகாசி 2016 செவ்வாய் 20:23 | பார்வைகள் : 9829


 கனவுகளுக்கு உளவியல் ரீதியான பல அர்த்தங்கள் உண்டு. அவ்வாறான அர்த்தங்கள் கொண்ட பொதுவான 6 கனவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


1. பொது இடத்தில் நிர்வாணமாக நிற்பதனை போன்ற கனவு
 
இந்த வகையான கனவு பலர் அனுபவித்துள்ளனர். பாடசாலை, வேலை செய்யும் இடம் அல்லது பொது இடத்தில் நிற்கும் போது நாம் நிர்வாணமாக நிற்பதை போன்று தெரிந்துவிடும். இப்படியான கனவுக்களுக்கு உளவியல் ரீதியில் அர்த்தங்கள் உண்டு.
 
அவ்வாறான கனவு நாம் மனதில் ஏதோ ஒரு விடயத்தை மறைக்க விரும்புகின்றோம் என்றும் அந்த விடயம் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டது என்பது தான் இந்த கனவின் அர்த்தமாகும். இதுவே அந்த கனவில் நாம் நிர்வாணமாக நிற்பதனை வேறு ஒருவரும் அவதானிக்கவில்லை என்றால் நாம் மறைக்க நினைக்கும் விடயம் இன்னும் ஒருவருக்கும் தெரியவில்லை என்று அர்த்தமாகும்.
 
2. ஒரு இடத்தில் இருந்து திடீரென கீழே விழுவதனை போன்ற கனவு  
 
இது பலரால் காணப்படும் ஒரு பொதுவான கனவு. உளவியல் ரீதியில் இந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்றால், ஏதோ ஒரு முக்கியமான விடயம் நமது கட்டுபாட்டை மீறிவிட்டு நாம் பாதுகாப்பற்ற பயந்த நிலையில் இருக்கின்றோம் என்பதாகும். அது மட்டும் அல்ல நாம் ஏதாவது ஒரு விடயத்தில் தோல்வியடைந்தல், உதாரணமாக ஒரு பரீட்சையில் நன்கு விடை எழுதவில்லை என்றாலும் இப்படியான கனவு வருமாம்.

3. யாரோ ஒருவர் நம்மை துரத்துவது போன்ற கனவு
 
இப்படி யாராவது நம்மை துரத்துவது போன்று நாம் கனவு கண்டால் அதற்கு உளவியல் ரீதியான அர்த்தம், நமக்கு இருக்கும் பிரச்சினைளை கண்டு ஓடிவிடுகின்றோம் என்று அர்த்தம். நாம் எந்த பிரச்சினையை பார்த்து ஓடிவிடுகின்றோம் என்பதனை பொறுத்து யார் அல்லது எது நம்மை துரத்துகின்றதென்பது தெரிய வரும். 
 
4. பரீட்சை செய்வதனை போன்ற கனவு 
 
இந்த கனவும் பலருக்கு வருகின்ற ஒரு பொதுவான கனவாகும். கனவில் திடீரென பரீட்சை செய்வது போன்று நினைவு வந்து விடும். இதன் நாம் அந்த பரீட்சை நடக்கும் மண்டபத்தை நாடி செல்கின்றோம். ஆனாலும் அந்த மண்டபத்தை தேடி தேடி பார்த்தாலும் நம்மால் அந்த இடத்தை அடைய முடியவில்லை.
 
அந்த கனவு பல வடிவங்களில் வரும்.  உளவியல் ரீதியில் இந்த கனவுக்கு கூறப்படும் அர்த்தம், உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றில் சோதனை செய்யப்படுகின்றோம் என் அர்த்தமாகும். அந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பதென்பதனை தெரியாமலேயே அவதிப்படுகின்றோம் என்று அர்த்தமாகும்.

5. நின்ற நிலையிலேயே ஓடுவதனை போன்ற கனவு 
 
இதுவும் பலருக்கு வருகின்ற ஒரு பொதுவான கனவாகும். இந்த கனவில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். ஆனாலும் ஒரு அடியேனும் முன்னே போக மாட்டோம். இந்த கனவிற்கு உளவியல் ரீதியில் கூறப்படும் அர்த்தம்,
 
நம் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவை ஒன்றுமே தீர்ந்து போகவில்லை. அப்படி தீர்ந்தாலும் அடுத்த பிரச்சினை  நம்மை தேடி வந்து விடுகின்றது. ஒரே நேரத்தில் பல விடயங்களை முயற்சி செய்யும் நாம் அது முடியாமல் அவதிப்படுகின்றோம் என் அர்த்தமாகும்.

6. பறப்பதனை போன்ற கனவு 
 
இதுவும் பலருக்கும் வரும் பொதுவான ஒரு கனவாகும். இந்த கனவிற்கு உளவியல் ரீதியில் கூறப்படும் விளக்கம்,
 
நமக்கு முக்கியம் எனப்படும் அனைத்து விடயங்களும் நமது கட்டுபாட்டின் கீழ் உள்ளதென அர்த்தமாகும். நமது தன்னம்பிக்கை மிகவும் பலமாக இருக்கின்றதென அர்த்தமாகும். நம்மால் எது என்றால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். 
 
அதே கனவில் நமக்கு பறப்பதற்கு கடினமாக இருந்தால் யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று நமக்கு தடையாக இருக்கின்றதென அர்த்தமாகும். பறக்கும் பயமாக இருந்தால், நம் வாழ்க்கையில் ஏதோ பிடிக்காத ஒரு சவால் இருக்கின்றதென அர்த்தமாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்