Paristamil Navigation Paristamil advert login

உணவு பதபடுத்த படும் முறை யாரால் கண்டு பிடிக்க பட்டது தெரியுமா ? !

உணவு பதபடுத்த படும் முறை யாரால் கண்டு பிடிக்க பட்டது தெரியுமா ? !

30 ஆனி 2012 சனி 09:12 | பார்வைகள் : 9489


மேற்கத்திய உணவு வகை சாப்பிடும் எல்லோரும் அறிந்திருப்பர் CAN FOOD என்றால் என்னவென்று, இப்போது இந்திய உணவு வகைகளும் நிறைய இதுபோல Canகளில் அடைத்து சீலிடப்பட்டு வருகிறது. சரி இதுபோல Canகளில் அடைத்து உணவுகளை விற்கும் முறை எப்போது வந்தது என்று தெரியுமா?

 
போர்க்காலங்களில் வீரர்களுக்கு உணவுகளை எடுத்து செல்லும் போது, அது பல வகைகளில் பாழாகியது, கெட்டுப்போனது. இதனால் அதிகப்படியான பொருட்செலவும், தேவையான சமயத்தில் உணவு இல்லாமல் வீரர்கள் சோர்வடையும் நிலையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பிரெஞ்சு மாமன்னர் நெப்போலியன் இந்த பிரச்சனைக்கு யார் தீர்வு சொல்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அதாவது குறைந்த செலவில் உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் வழிமுறையை கண்டறிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
இந்த அறிவிப்பினை தொடர்ந்து நிகோலஸ் அபர்ட் (nicholas appert) என்பவரால் உணவுகளை கேன்களில் அடைக்கும் வழிமுறை கண்டறியப்பட்டது. காற்றுப்புகாத ஜாடியில் அடைக்கப்படும் உணவு கெட்டுப்போகாது என்ற தனது கண்டுபிடிப்பின் மூலம் 12000 Franc பரிசும் பெற்றார். முதலில் உணவுகளை கண்ணாடி குடுவைகளில் பயன்படுத்த ஆரம்பித்து இன்று வித விதமான வடிவங்களில் Canகளில் உணவுகள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்