Paristamil Navigation Paristamil advert login

கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக

கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக

13 ஆனி 2012 புதன் 11:31 | பார்வைகள் : 13414


இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kineticenergy) உள்ளது. இந்த  துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறுமைல் விரைவில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போது, அதன் சிறு அளவு

உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக்
குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக்கி
அதன் வழியே வெளியேறிவிடுகிறது.
 
மாறாகக் கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது; அது கண்ணாடிப் பலகையைத் தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றமுறுவதோடு அதாவது கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் - பரவுகிறது. இதன் விளைவாகக் கல்லெறிபட்ட கண்ணாடிக் கதவுப்பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்