Paristamil Navigation Paristamil advert login

புறா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் தெரியுமா?

புறா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம்  தெரியுமா?

7 ஆனி 2012 வியாழன் 09:18 | பார்வைகள் : 9662


பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம்.

 
இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 
கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவலை பறவைகளின் ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் என்றால் நம்புவீர்களா 1?. ஆம் நண்பர்களே..! புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள்.
 
உயர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன.
 
இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்