இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?
5 ஆனி 2012 செவ்வாய் 08:27 | பார்வைகள் : 10826
வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும் என்பது விதி. இரயில் தண்டவாளங்களில் இரும்பு வெப்பத்தால் சூடேறும்போது இரும்பின் மூலக்கூறுகள் விரிவடைகிறது .இந்த விரிவை 'விடப்பட்ட இடைவெளி' சரி செய்து கொள்கிறது. இல்லையெனில் தண்டவாளம் உடையவோ பிறழவோ செய்யும். இதே போல்தான் சிமெண்டால் கட்டப்பட்ட பாலங்களிலும் சிறு இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.
இது அழுத்ததையும் சரி செய்து கொள்கிறது. தொழில் சார்ந்த இயந்திரங்களில் பயன்படும் 'பேரிங்' போன்றவைகளும் இதே தத்துவத்தால் தான் தயாரிக்கபடுகிறது.
தர்மா மீட்டரும் இந்த 'வெப்பத்தால் உருபெருக்கம்' என்ற தத்துவத்தில் தான் செயல்படுகிறது! தர்மா (THERMO)வெப்பம் என்று அர்த்தம்!