Paristamil Navigation Paristamil advert login

ஒளிவருட தூரம் என்றால் என்ன?

ஒளிவருட தூரம் என்றால் என்ன?

31 வைகாசி 2012 வியாழன் 13:29 | பார்வைகள் : 9836


 பூமியில் உள்ள தூரங்களைக் குறிப்பிட கிலோமீட்டர், மைல் போன்ற அளவுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிட இந்த அளவுகள் பயன்படாது. எனவே, `ஒளிவருட தூரம்' என்ற அளவைப் பயன்படுத்துகிறோம்.

 
ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் மைல் தூரத்திற்குப் பாய்ந்து செல்லக்கூடிய ஆற்றல் படைத் தது ஒளி. இந்த ஒளி ஒரு வருடத்தில் செல்லும் தூரம் 6 டிரில்லியன் மைல். அதாவது 60 லட்சம் கோடி மைல். இதையே ஒரு `ஒளிவருட தூரம்' என்கிறோம்.
 
சூரியனுடைய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. இதைப்போல கடைசி கிரகமான புளூட்டோவைச் சென்றடைய 41/2 மணி நேரமாகிறது. எனவே, புளூட்டோ கிரகம் சூரியனில் இலிருந்து 4 1/2 ஒளிமணி நேர தூரத்தில் உள்ளது என்று சொல்லலாம்.
 
அதேபோல `பிரக்சிமா சென்டாரி' என்ற நட்சத்திரத்தை சூரிய ஒளி சென்றடைய 4 1/2 வருடங்கள் ஆகின்றன. எனவே, இந்த நட்சத்திரம் சூரியனில் இருந்து 4 1/2 ஒளிவருட தூரத்தில் இருப்பதாகக் குறிப்பிடலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்