உலகிலேயே மிகப்பெரியவைகள்
21 வைகாசி 2012 திங்கள் 06:08 | பார்வைகள் : 11403
உலகிலேயே மிகப்பெரிய விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா.
உலகிலேயே மிகப்பெரிய மலை இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலை
உலகிலேயே மிகப்பெரிய நதி எகிப்தில் ஓடும் நைல் நதி.
உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்ரிக்காவின் கிம்பர்லீ வைரச் சுரங்கம்.
உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான்.
உலகிலேயே மிகப்பெரிய கடல் பசுபிக் கடல்
உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம்.
உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா.
உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம்.
உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யா.
உலகிலேயே மிக உயரமான ஏரி திபெத்தில் உள்ள நாம்ஸோ எனும் ஏரி.
இன்னும் இதுபோல் ஏராளமானவை உள்ளன.