கிணறுகள் வட்ட வடிவில் இருப்பது ஏன்?
9 வைகாசி 2012 புதன் 09:25 | பார்வைகள் : 11308
கிணறுகள் எங்கு இருந்தாலும், அவை வட்டவடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். எதற்காக இந்த வடிவத்தில் மட்டும் அமைக்கிறார்கள் என்று பார்ப்போமா...கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் வடிவம் கலையாமல் இருக்கச் செய்வது கிணற்றைச் சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைதான்.
கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் திறன் அதிகரிக்கிறது.
பொதுவாக ஆர்ச் வடிவ வளைவிற்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் என்று எல்லா இடங்களிலும் அவை, ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு அரை வட்ட ஆர்ச்சுகள் சேர்ந்து, வட்ட வடிவை உருவாக்குகின்றன.