Paristamil Navigation Paristamil advert login

புளூடூத் பெயர் வந்தது எவ்வாறு?

புளூடூத் பெயர் வந்தது எவ்வாறு?

27 சித்திரை 2012 வெள்ளி 07:21 | பார்வைகள் : 9821


புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில்

நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன செய்தார்? என்று கேள்வி எழுகிறதா? 900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.
 
பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்