எரிமலைகளாலும் நன்மை உண்டு உங்களுக்கு தெரியுமா??
4 சித்திரை 2012 புதன் 08:10 | பார்வைகள் : 10519
எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது.
இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென்அமெரிக்கா, நிïசிலாந்து, ஜப்பான், மெக்சிகோ, சிசிலி முதலிய இடங்களில் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக்கிறார்கள்.
அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய்வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.