Paristamil Navigation Paristamil advert login

பனிக்கட்டியில் ஆவி ஏன் உருவாகிறது?

பனிக்கட்டியில் ஆவி ஏன் உருவாகிறது?

9 மாசி 2012 வியாழன் 15:17 | பார்வைகள் : 16099


இப்போது குளிர்காலம். அந்த குளிரில் சூடாக `ஆவி பறக்க’ ஒரு கப் காபியோ அல்லது டீயோ குடித்தால் உடலுக்கு இதமாக இருக்கும். காபி அல்லது டீயில் ஆவி பறக்க அதில் உள்ள வெப்பம் காரணம் என்றால், பனிக்கட்டியில் இருந்தும் ஒரு `ஆவி’ வருகிறதே… அது என்ன ஆவி என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?

 
அதற்கு காரணம் இதுதான். பனிக்கட்டிக்கு அருகில் இருக்கும் காற்றில் ஈரத்தின் அடர்த்தி அதிகமாக காணப்படும். பனிக்கட்டிக்கும், அதன் சுற்றுப்புறத்திற்கும் உள்ள உஷ்ண வித்தியாசம் காரணமாக நீர்த்துளிகள் வெளிப்படுகின்றன.
 
அந்த நீர்த்துளிகள் மிக நுட்பமான தூசுத் துகள்களில் ஒட்டிக்கொண்டு ஆவி வடிவில் வெளியேறுகின்றன. அது, நம் பார்வைக்கு பனிக்கட்டி ஆவியாவது போல் தெரிகிறது. உண்மையில், அது நீராவிதான். நாம்தான் அதை `ஆவி’ ஆக்கிவிட்டோம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்