Paristamil Navigation Paristamil advert login

கண்களை இமைக்கக் காரணம் என்ன தெரியுமா..?

கண்களை இமைக்கக் காரணம் என்ன தெரியுமா..?

18 தை 2012 புதன் 14:01 | பார்வைகள் : 10873


மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை.

 
அதன் பணி, தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ, காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும், இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும், எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர், கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நாம்  அழுகிறோம் என்றே கூறலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்