பூகம்பம் ஏற்படுவது எப்படி?
30 மார்கழி 2011 வெள்ளி 05:53 | பார்வைகள் : 11601
கற்பாறைகளும், உலோகங்களும் இணைந்து உருகிய நெருப்புக் கோளம், படிப்படியாகக் குளிர்ச்சி அடைந்தது தான் நாம் வாழ்ந்து வருகிற பூமி. இதோட மேற்பரப்புல மணற்பரப்புகளும், சமவெளிகளும், மலைகளும், கடல்களும் ஏராளமா இருக்கு. அதனால தான் மேற்பரப்புல உயிரினங்கள் வாழ முடியுது.
ஆனா, பூமியின் அடிப்பாகம் இன்னும் குளிர்ச்சி அடையாம நெருப்புக் குழம்பா தான் இருக்கு. இந்த நெருப்புக் குழம்பு சில சமயம் பூமியோட மென்மை யான மேற்பரப்பு வழியாக வெளிய வருது. அப்ப தான் பூமி அதிர்ச்சியடைஞ்சு கிடுகிடுன்னு ஆடும். இதைத்தான் `பூகம்பம்' வந்துருச்சுன்னு சொல்றோம்.
சிலசமயம் பூமிக்குள்ள இருக்குற நெருப்புக் குழம்பு, பூமியோட கடினமான மேற்பரப்பைத் தாக்கும்போது நெருப்புக் குழம்பு வெளியேற வழி கிடைக்காது. இத னால அந்த மேற்பரப்பு உயர்ந்து மலைகளாக மாறி விடுது. பூகம்பத்தின்போது வெளிவரும் நெருப்புக் குழம்பு, நாளடைவில குளிர்ந்து மலைகளாகவும், பாறைகளாகவும் மாறுது. அதுல நெருப்புக் குழம்பு வெளிவந்த துவாரம் இருக்கும். மறுபடி அந்த இடத்துல பூகம்பம் வந்தா, அந்த துவாரம் வழியா நெருப்புக் குழம்பு கக்கப்படும். இதைத்தான் நாம `எரிமலை'ன்னு அழைக்கிறோம்.