ukrainien கோழி இறைச்சி இறக்குமதி எங்களின் உற்பத்தியில் பெரும் தாக்கம். பிரான்ஸ் பண்ணையாளர்கள்.
8 புரட்டாசி 2023 வெள்ளி 20:34 | பார்வைகள் : 6716
கடந்த 2022ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் Ukrainien நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வரி விலக்கு அளித்து வருகிறது. போர் காரணமாக அவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்த வரிச்சலுகை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 127% சதவீதம் இறக்குமதி அதிகரித்து உள்ளது. உதாரணமாக மாதம் ஒன்றுக்கு 45,24 மில்லியன் தொன் கோழி இறைச்சி ஐரோப்பிய நாடுகளுக்கு, வரி விலக்கோடு இறக்குமதி ஆகிறது. இதில் பிரான்சில் சமைக்கப்படும் கோழி இறைச்சியில் இரண்டுக்கு ஒன்று Ukrainien இறக்குமதியான கோழி இறைச்சியாகவுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் வரி விலக்கு இன்றி சந்தைப்படுத்தலுக்கு வரும் போது, விலை உயர்வாக உள்ளது. மக்கள் விலை குறைவான கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதால் எங்களின் உழைப்பு கேள்விக் குறியாக உள்ளது என பிரான்ஸ் பண்ணையாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்
இந்த நிலையில்தான் பிரான்ஸ் அரசாங்கம் Ukrainien போருக்கு பல பில்லியன் கணக்கான மக்கள் பணத்தை அள்ளி வழங்கி வருகிறது என பல அரசியல் கட்சிகள் இன்றைய அரசை விமர்சித்து வருகின்றன.