Paristamil Navigation Paristamil advert login

Emile வாழ்ந்த மலைக் கிராமம் மீண்டும் மூடப்பட்டது. "எங்களை மறந்துவிடுங்கள்" நகரபிதா François Balique.

Emile வாழ்ந்த மலைக் கிராமம் மீண்டும் மூடப்பட்டது.

9 புரட்டாசி 2023 சனி 06:57 | பார்வைகள் : 7128


கடந்த July 8ம் திகதி மர்மமான முறையில் Haut-Vernt மலைக்கிராமத்தில் காணமல் போன இரண்டரை வயது சிறுவன் Email பற்றிய தகவல்கள்; இரண்டு மாதங்கள் கடந்தும் கிடைக்காத நிலையில் அக்கிராமத்தில் சோகங்கள் தொடர்கிறது.

August 15ம் திகதி  Marie, Colomban எனும் இருபது வயது மதிக்கத்தக்க சிறுவனின் பெற்றோர்கள் தங்கள் முகநூல் கணக்கில் ("Prions pour Émile" ) "எமிலுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்"என்னும் செய்தியை பதிவிட்டனர். இந்த செய்தி அவர்களின் மனோநிலை மிகுந்த சோகத்தில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

அந்த கிராம மக்களின் அமைதிக்காக  மூடப்பட்டு இருந்த Haut-Vernt கிராமத்தை நகர முதல்வர் கடந்த August மாதத்தின் கடைசிப் பகுதியில் மீண்டும் திறந்விடும் ஆணையைப் பிறப்பித்தார். பிறப்பித்த நாளில் இருந்து ஊடகங்களின் ஒளிப்பதிவு கருவிகள் அந்த கிராமத்தை துளைத்தேடுத்தது. இதனால் அந்த கிராமத்தின் இயல்பு நிலை பாதிப்படைந்தது. 

இந்த நிலையில் நகர முதல்வர் François Balique. "எங்களை மறந்துவிடுங்கள்" என்னும் தொனிப் பொருளில் புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளார். 

புதிய ஆணையின்படி இம்மாதம் 6ம் திகதியில் இருந்து தேவையற்ற வெளியாட்களின் நடமாட்டம் குறித்த கிராமத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்