கோபமான நோயாளியும் அதைவிட கோபமான டாக்டரும்
7 ஆவணி 2023 திங்கள் 11:47 | பார்வைகள் : 7550
அரவிந்த் ரொம்ப கோபக்காரர். தனக்கு பிடிக்காத விஷயத்தை யார் செய்தாலும் சும்மா விட மாட்டார். அவரது கோபமே அவருக்கு எதிரியாக மாறியது. அதை கட்டுப்படுத்த பல வகைகளில் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின்படி மனநல மருத்துவர் ஒருவரை சந்திக்க சென்றார் அரவிந்த். அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் இது..
அரவிந்த்: டாக்டர்.. எனக்கு ரொம்ப கோபம் வருது.. என்ன பண்ணலாம்?
மருத்துவர்: தண்ணி குடி தம்பி.. அரவிந்த்: (கோபத்துடன்..) இதெல்லாம் பழைய ஐடியா.. இதுக்கூட தெரியாமலா நான் இங்கு வந்திருக்கேன்.. வேஸ்டா போச்சு, நீங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சீங்களோ..
மருத்துவர்: (30 வினாடி அமைதியா இருந்துட்டு) உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சு போச்சு..? இப்ப நான் சொல்றத கேளுங்க..
அரவிந்த்: டாக்டர்ர்ர்ர்ர்... என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க! ஏன் இப்ப அமைதியா இருந்தீங்க?
மருத்துவர்: (30 வினாடி அமைதியாக இருந்துட்டு) உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சு போச்சு..? இப்ப நான் சொல்றத கேளுங்க..
அரவிந்த்: அப்போ உங்கள மாதிரி இருந்தால்..?
மருத்துவர்: உங்களுக்கு எதிரில் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருந்தால் 30 வரை எண்ணிட்டு பேசுங்க..
அரவிந்த்: ஓ அதான், எனக்கு நான் பேசும்போது 30 வினாடி அமைதியா இருந்தீங்களா? டாக்டருக்கே ரொம்ப கோபம் வரும்போல.. என்னைவிட பலசாலியா இருந்தா என்ன செய்றது டாக்டர்?
மருத்துவர்: பலசாலியாக இருந்தார் என்று சொன்னால் 100 வரை எண்ணிய பிறகு பேச வேண்டும்.
அரவிந்த்: ஓகே டாக்டர்... எதிரில் இருப்பது மனைவியாக இருந்தால் என்ன பன்றது?
மருத்துவர்: நானும் அதுக்குதான் பதில் தேடிக்கிட்டே இருக்கேன்.. நிப்பாட்டாம எண்ணிகிட்டே இரு.. வேற வழி இல்லப்பா!