Paristamil Navigation Paristamil advert login

தெர்மா மீட்டர் பறவை பற்றி அறிவோமா ?

தெர்மா மீட்டர் பறவை பற்றி அறிவோமா ?

4 ஆடி 2013 வியாழன் 10:35 | பார்வைகள் : 10004


 வெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை, இனப்பெருக்க காலத்தில் தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, அதைச் சுற்றிலும் முட்டையிடும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும். இந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும் கடமை ஆண் பறவையினுடையது. 

 
வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நம்ம ஊருக்குக் கூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்