பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
13 ஆனி 2013 வியாழன் 11:00 | பார்வைகள் : 10227
சிலதேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால், அதன் கண்கள் இதற்க்கு உதவுகின்றன.
பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக்கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தியம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது.பார்த்தல்,கேட்டல்,தொடுதல், முகர்தல்,நுகர்தல்,போன்றவைதான் அவை. இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.
கேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி நமக்குக் கிடையாது.ஆனால்
மனிதனின் அதீத கண்டுபிடிப்பில் நைட் வியூவர் போன்ற பைனாகுலர்களை உருவாக்கியது இயற்கையை தொட்டு விடக்கூடிய சாத்தியம் தானே!