காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
5 ஆனி 2013 புதன் 06:44 | பார்வைகள் : 10895
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.